Breaking News
recent

அட்சய திருதியை மகா லட்சுமிக்கு சிறப்பு வழிபாடு

முசிறி அடுத்த வெள்ளூர் கிராமத்தில் அட்சய திரிதியை முன்னிட்டு ஐஸ்வர்ய மஹாலட்சுமி சன்னதியில் யாக வேள்வி உள்ளிட்ட சிறப்பு வழிபாடு  நடத்தப்பட்டது. திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த வெள்ளூர் கிராமத்தில் திருக்காமேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலய  பிரகாரத்தில் வில்வ மரத்தடியில் ஐஸ்வர்ய மஹாலட்சுமி  சன்னதி அமைந்துள்ளது. சிவபெருமான் மஹாலட்சுமிக்கு ஐஸ்வர்ய மகுடம் சூட்டிய தலமாக போற்றப்படும் இக்கோயிலில்ல சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தை தலையில் சூட்டியவாறு அமர்ந்த திருக்கோலத்தில் மஹாலட்சுமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.தாமரை மலர் சாற்றி அட்சய திரிதியை அன்று மஹாலட்சுமியை வழிபட்டால் சகல செல்வங்களும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்நிலையில், அட்சய திருதியை முன்னிட்டு ஐஸ்வர்ய மஹாலட்சுமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
இதையொட்டி, சன்னதியில் மூல மந்த்ர மகா யாகம், சுவாமிக்கு 16 வகையான அபிஷேகம் சிறப்பு மலர் அலங்காரம் உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டன. இன்று கோ பூஜை, ஐஸ்வர்ய வழிபாடு, யாக வேள்வி நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
Unknown

Unknown

No comments:

Post a Comment

Alpha Vellur. Powered by Blogger.